விவசாயிகளுக்கு ஆந்திர முதல்வர் தந்த ஆதரவு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கன்னியாகுமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நடைபெறுகிற விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
பயணத் திட்டத்தின் அடிப்படையில் கடந்த 4ம் தேதி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களை சந்தித்து ஆதரவு கோர விரும்பினோம். ஆனால் ஆந்திர மாநில அரசின் சார்பில் விசாகப்பட்டினத்தில் கடந்த 3,4,5 ஆகிய மூன்று தினங்கள் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் அனுமதி இறுதி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் 6ம் தேதி தெலுங்கானா மாநில முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்தோம்.
திடீரென ஆந்திராவிற்கு வந்து சந்திக்க முடியுமா? என ஆந்திர மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் கேட்டுக் கொண்டார்கள். எங்களால் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி பயணத் திட்டத்தின் அடிப்படையில் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் எங்கள் சார்பில் உங்களிடத்திலோ அல்லது நீங்கள் யாரிடம் சொல்லுகிறீர்களோ அவர்களிடத்திலே கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று சொன்னோம்.
அதன் அடிப்படையில் 07.03.2023 ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமி அவர்களை சென்னை மண்டல செயலாளர் வெங்கடாத்ரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு தலைமையிலான நிர்வாகிகள் குழு நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தது.
அதனைப் பெற்றுக் கொண்ட துணை முதலமைச்சர் கோரிக்கைகள் முழுமைக்கும் ஆந்திர அரசு ஆதரவளிப்பதாகவும்,உங்கள் பயணம் வெற்றி பெற முதல்வர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மிக்க நம்பிக்கை அளிக்கும் பயணமாக அமைந்துள்ளது எனபொதுச்செயலாளர்
வி.கே.வி.துரைசாமிி தெரிவித்தார்