சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ்பாகேல் கிசான் யாத்திரைக்கு முழு ஆதரவு. அவரது சந்திப்புக்கு பின் பிஆர்.பாண்டியன் தகவல்
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ்பாகேல் கிசான் யாத்திரைக்கு முழு ஆதரவு. அவரது சந்திப்புக்கு பின் பிஆர்.பாண்டியன் தகவல்
ஆதரவு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2குமரி துவங்கி மார்ச் 20 டெல்லி பாராளுமன்றம் நோக்கி நாடு தழுவிய கிசான் யாத்திரை இன்று 08.03.2023 சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ்பாகல் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பயணத்தின் நோக்கம் குறித்த கோரிக்கை மனு அளித்து யாத்திரைக்கு முழு ஆதரவு தர வேண்டும்.மத்திய அரசை வலியுறுத்தி தங்கள் தலைமையிலான அரசு விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினோம்.
அதற்கு பதிலளித்த முதல்வர்.முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்ததோடு, பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக கூறினார். முன்னதாக அம்மாநில மக்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாட வந்தபோது தமிழ்நாடு விவசாயிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அவர்கள் மாநில மக்களின் பாரம்பரிய முறைபடி எங்களுக்கு பொட்டு வைத்து சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து எங்களை மேடைக்கு அழைத்து அவரோடு குழு படம் எடுத்துக் கொண்டார்.
உற்ச்சாகம்
அவரது சந்திப்பு யாத்திரையில் தொடர் பயணத்தை ஈடுபட்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிகுந்த நம்பிக்கை அளித்தது. உற்சாகத்தோடு எங்கள் பயணம் ஓடிஸா முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்காக புவனேஸ்வர் நோக்கி புறப்பட்டு உள்ளோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு
மேலும் சத்தீஸ்கர் மாநில சீக்கிய மத தலைவர் ஜஸ்பீர்சிங் ஷேகல், பிரதாப் சிங் சிர்ஷா தலைமையில் சிறப்பான உணவு உட்பட வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வி.கே.வி.துரைசாமி.
பொது செயலாளர்