தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பயணத்தில் இன்று

0 90
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு
தலைவர் விவசாயிகளின் போராளி
பி.ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நீதி கேட்டு நெடும் பயணம்கன்னியாகுமரி துவங்கி டெல்லி பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் கிசான்யாத்திரா பயண குழு காலமேற்குவங்க மாநிலம் கல்கத்தா தலைநகரம் வந்தடைந்தது.மாநில முதலமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தோம். அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே அவரது இல்லம் அமைந்திருக்கும்பகுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடுள்ளது. அவர் பொது நிகழ்ச்சிகளையும் சந்திப்புகளையும் தவிர்த்து உள்ளார். விரைவில் உங்களை நேரில் அழைத்து பேச உள்ளதாகவும் அவரது அலுவலக செயலாளர் கூறினார்.இதனையடுத்து திரினமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமானதிருமதி சாந்தா சேத்ரி MP அவர்கள் ஆதரவு கோரும் கடிதத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும்,மேற்குவங்க அரசு உங்கள் கோரிக்கைக்காக மத்திய அரசை வலியுறுத்தும் என முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறினார்.

தகவல்
வி.கே.வி.துரைசாமி.
பொது செயலாளர்.

Leave A Reply

Your email address will not be published.