காசி வாரணாசியில் விவசாயப் போராளிகள்

0 138

காசி வாரணாசியில்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் மார்ச் 2ல் கன்னியாகுமரி துவங்கி மார்ச் 20ல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் நேற்று பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வியாதவ் அவர்கள் சந்திப்புக்கு பின் இன்று (15.03.2023, அதிகாலை காசி வந்தடைந்தோம். ஒரு நாள் காசியில் முழுமையாக தங்கி காசி விசுவநாதர் ஆலய தரிசனத்தை முடித்தோம். சிறப்பு தரிசன ஏற்பாடுகளை தமிழ்நாட்டில் காவிரி மண்ணைச் சார்ந்த உபியில் பணியாற்றி வரும் இரு காவல்துறை உயர் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

மிகச் சிறப்பான தரிசனத்தை முடித்துக் கொண்டு இரவு கங்கா தீபாராதனை நிகழ்ச்சியை கண்டு களித்தோம்.
15 நாள் பணி சுமை ஒரு நாள் காசி ஓய்வின் உற்சாகத்துடன் பயணத்தை 9:00 மணிக்கு காசியில் இருந்து துவங்கியுள்ளது

நாளை மதியம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சென்றடையலாம் என எதிர்பார்க்கிறோம்

தங்கள்
வி.கே.வி. துரைசாமி.

Leave A Reply

Your email address will not be published.