நீதி கேட்டு நெடும் பயணம் ராஜஸ்தான் முதல்வர்அசோக்கேலாட் முழு ஆதரவு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ல் கன்னியாகுமரியில் துவங்க மார்ச் 20ல் பாராளுமன்றம் நோக்கி செல்லும் நீதி கேட்கிற நெடும் பயணம் இன்று ராஜஸ்தான் முதலமைச்சர் மாண்புமிகு அசோக் கேலாட் அவர்களை ஜெய்ப்பூர் தலைமை அலுவலகத்தில் சந்தித்தது வாயிலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்முதல்வ நீண்ட நேரம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
வீட்டின் முன்பாக வெளியே வந்தும் குழு படங்கள் எடுத்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார். உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று சொன்னார். அவரது சந்திப்பு மிகுந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது தான் முதல்வர் மட்டுமல்ல மூத்த அரசியல் தலைவர் என்பதை அவரது சந்திப்பு தங்களுக்கு உற்சாகத்தை தருவதாக விவசாய குழுவினர் தெரிவித்தனர்
பின்னர்
பிஆர்.பாண்டியன் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
டெல்லியில் விவசாயிகள் போராடிய போது போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத பாரத பிரதமர் மோடி அவர்கள் உத்தரப்பிரதேச தேர்தல் வரும் என்கிற அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்காக போராடிய விவசாயிகளிடம் செய்தியாளர்கள் மூலமாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெறுங்கள் வேளாண் விரோத சட்டத்தை திரும்ப பெறுவதோடு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் கொடுத்தார்.
ஆனால் கொடுத்து ஓராண்டுகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுவரையிலும் வாக்குறுதி நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார்
கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் கூட்டத்திலும் அதற்கான எந்த அறிவிப்புகள்ம் இடம் பெறவில்லை.
இதனை மீண்டும் நினைவுபடுத்தி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் பிரதமரிடம் சந்தித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே பாஜக தவிர்த்த மற்ற மாநில முதலமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். ராஜஸ்தான் அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் விவசாயின் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் மாநில அரசுகள் தான் வழக்கு குறித்து பதில் அளிக்க முடியும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தட்டிக் கழித்து உள்ளனர். எனவே இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்ததோடு, உங்கள் பயணம் வெற்றி பெற நான் முழு ஆதரவளிப்பேன் வாழ்த்துகிறேன் என்று வழி அனுப்பினார் என்றார:
வி.கேவி.துரைசாமி
பொதுச்செயலாளர்