கிசான் யாத்திரை கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து பேசி முடிவெடுப்பேன் பஞ்சாப் சபாநாயகர் குல்தார்சிங்சந்துவான் உறுதி .

0 275

கிசான் யாத்திரை கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து பேசி முடிவெடுப்பேன் பஞ்சாப் சபாநாயகர் குல்தார்சிங்சந்துவான் உறுதி
பிஆர்.பாண்டியன் தகவல்….

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு விவசாயிகளின் போராளி தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் குமரி முதல் டெல்லி பாராளுமன்றம்வரை நீதி கேட்டு நெடும் பயணம் திட்டமிட்டபடி இன்று18-03-2023 பஞ்சாப் தலைநகரம் சண்டிகர் வருகை தந்தது.

பஞ்சாப் விவசாயிகள் பல்தேவ்சிங் சிறக்ஷா தலைமையில் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.பஞ்சாப் முதலமைச்சர் ஜி 20 மாநாட்டில் அமிதசரஸ் சென்றுள்ளதால் அவரது அனுமதி யின் பேரில் சபாநாயகர் குல்தார்சிங் சந்துவான் தனது வீட்டுக்கு அழைத்து காலை சிற்றுண்டி அளித்தார்.

பின்னர் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு முதலமைச்சர் அவர்களோடு நடக்கிற மாநாட்டில் பங்கேற்று இருப்பதால் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உங்கள் சார்பில் கொடுக்கக்கூடிய கோரிக்கை மனுவை நான் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். உங்கள் கோரிக்கை நிறைவேற முதலமைச்சருடன் கலந்து பேசி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவு எடுப்பேன்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள மாநாடு என்பதால் சந்திக்க முதலமைச்சர்கள் அனுமதிப்பதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இதை நீங்கள் உணர்ந்து உங்கள் பயணம் முழு வெற்றி பெற எங்கள் அரசு துணை நிற்கும் என்று வாழ்த்தி வழியனுப்பினார். பேருந்து வரையிலும் வந்திருந்து குழு படம் எடுத்துக்கொண்டு வழியனுப்பினார்.

இதனையடுத்து டெல்லி நோக்கி எங்களது பயணம் புறப்பட்டுள்ளது 20ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் மற்றும் தலைவர்களை சந்திக்க உள்ளோம்.

21ஆம் தேதி ஜந்தர்மந்தரில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி வந்து கொண்டுள்ளனர் என்றார்:
வி.கே.வி.துரைசாமி
Leave A Reply

Your email address will not be published.