நம்புதாளை நம்பு ஈஸ்வரர் கோவிலில் சனிபிரதோசப்பூஜை

0 88

திரண்ட பக்தர்கள்


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால்,பழம், பன்னீர், இளநீர், தேன், அரிசிமாவு, சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், அபிஷேகப்பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர்,முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கால பைரவர், கல்யாண நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல் அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.வாசு, கருப்பசாமி சுவாமிநாதன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதே போல் தொண்டியில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், தளிர் மருங்கூர் உலககேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பெண்கள்,குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.