தொண்டி:விழிப்புணர்வு பேரணி
டி.எஸ்.பி. நிரேஷ் தொடங்கிவைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எஸ்.பி பட்டிணத்தில்,மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு பிரச்சாரம் திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் தலைமையில் நடைபெற்றது. விழிப்புணர்வு வாகனம் எஸ்.பி.பட்டிணம் துவங்கி காரங்காடு வரையிலான 14 பஞ்சாயத்திலுள்ள 64 கிராமங்களில் தொடர்ந்து 5 நாட்கள் துண்டு பிரசுரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டி.சி.பி.யூ.சமூகபபணியாளர், பஞ்சாயத்து தலைவர் மாற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
தொண்டி ஜெயந்தா