புலியூர் அருள்மிகு பூரண புஷ்கலை நிலவளம் உடைய ஐயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புலியூர் கிராமத்தில் அருள் பாலித்து வருகின்ற ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத நிலவளமுடைய ஐயனார் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முருகன் முத்துக் கருப்பண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருகின்ற 6 7 2023 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் சிங்கப்பூர் உத்தாராம் அவர்கள் முன்னிலையிலும் உயர்திரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ராமசாமி திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் தலைமையிலும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது புலியூர் கிராமத்தில் கோவில் கொண்டுள்ள நிலவளமுடைய ஐயனார் ஸ்ரீ பத்ரகாளியம்மன் முத்துக்கருப்பர் வள்ளி தெய்வானை முருகன் தெய்வங்கள் இங்கு ஆலயம் கொண்டு அண்டி வருபவர்களுக்கு பிணி தீர்த்து அருளாட்சி செய்துவருகிறது.