காலை6மணி…உதயமான சூரியகதிர்கள் இருள்கிழித்து வெளிச்சம் தர…அதுவரை முகவை நாட்டில் புதுமை நிறைந்த புதுபட்டிணம் கிராமத்தில் வங்ககடல்லோரத்தில் அலைகள் தாலாட்ட மரக்கிளை தொட்டில்களில் துயில் கொண்ட பறவைகள் விழித்தெழுந்து படையெடுக்கின்றன.. பஞ்சாயத்துதலைவர் வீட்டுக்கு !
தினந்தோரும் நடக்கும்…அழகியல்இது!.
முகமலர்ந்து உபசரிக்கிறார் முகமது முஸ்தபா.
கம்பு,சோளம்,அரிசி,போன்ற,தாணியங்களுடன் தண்ணீரும் தாயர் நிலையில் வைக்கிறார்
காலைப்பசியாம்..கடும் பசியை கவலையில்லாமல் உண்டு மகிழ்கின்றனபறவைக்கூட்டம்.
இதிலென்ன ஆச்சர்யம் என்போர்க்கு..?!
தோகை மயில்களுடன் காக்கைகளும்,இன்னும் பலகுருவிகளும் ஒன்றாக உண்ணும் அழகுதான்!, இது ஆச்சரியம் தானே
மனிதனுக்கு.!
காக்கை குருவியும் எங்கள் ஜாதியென்ற
கவிஞர் வரிகளுக்கு-ஏற்ப
வாழும் இயற்கை காதலன் முகமது முஸ்தபாவின் உயிர்ம நேயம் வாழ்க!
டி.வி.மணிகண்டன்