1லட்சம் மனுக்கள் நெடுநாள் அறப்போராட்டத்தின்அடுத்த கட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் மீது அரசு ஏனோ பாரா முகம் ?

0 140

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி

முதல்வருக்கு ஒரு லட்சம் மனுக்கள்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதனை நிறைவேற்றும் விதமாக திமுக தேர்தல் அறிக்கை குழு, முதல்வர் அலுவலகம், பள்ளிக்கல்வி அமைச்சர், இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர்,
தலைமை செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு ஒரு லட்சம் மனுக்களை அளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 2012-ம் ஆண்டு 16ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகியவற்றில் ₹5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்கள்.

தொகுப்பூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2021-ம் ஆண்டு முதல் ₹10ஆயிரம் ஆக வழங்கப்படுகிறது.

இதில் மரணம், பணி ஓய்வு என 4 ஆயிரம் காலியிடம் ஆகிவிட்டது.

இதனால் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகிறோம்.

10 ஆண்டு பணி என்பதையும் கடந்து தற்போது 12வது ஆண்டில் பணிபுரிகிறோம்.

எங்களின் பணிஅனுபவத்தையும், வாழ்வாதாரம் மேம்படவும், மனிதாபிமானத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துஉள்ளது.

அனைத்து கட்சிகளும் பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளது.

திமுக இதே கோரிக்கையை எதிர்கட்சியாக இருந்தபோது வைத்தது.

இப்போது ஆளும்கட்சியாக திமுகவே இருப்பதால் அந்த கோரிக்கையை நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.


Leave A Reply

Your email address will not be published.