முதல்வருக்கு வாழ்த்துக்கள்
தமிழக முதல்வர் அவர்களுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பாராட்டுகளையும், விமர்சனங்களையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே சமமாக எடுத்துக் கொண்டு மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என கருதி இரவு, பகல் பார்க்காமல் மக்கள் பணி செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பூரண உடல் நலனோடு மக்கள் பணி தொடர, பல ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை பிறந்தநாள் பரிசாக அறிவித்து இந்த 12ஆயிரம் குடும்பங்கள் வாழ ஒரு விடியல் தர வேண்டுகிறோம்.
எஸ்.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.