நியூசிலாந்தில் கேப்ரியேல் சூறாவளி; அவசரநிலை அறிவிப்பு
வெல்லிங்டன்: நியூசிலாந்தின் நார்த் ஐலண்ட் எனும் வடக்குத் தீவை கேப்ரியேல் சூறாவளி தாக்கியபோது ஒரு கடலோடியை மீட்கும் காட்சி. நியூசிலாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இதற்கு முன்பு அந்நாட்டில் இரண்டு முறை மட்டுமே அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. பலர் வீடுகளிலிருந்து வெளியேறி கூரைமேல் இருக்கவும் நேரிட்டது