உலகம் எங்களைக் கைவிட்டுவிட்டது
அல்-அட்டாரிப் (சிரியா): போரால் அவதிப்படும் சிரியாவின் சில பகுதிகள் அண்மையில் உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. போதுமான உதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் சில வேளைகளில் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய அன்புக்குரியவர்களைத் தேடும் பணிகளைத் தாங்களே மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அந்தப் பகுதிகளில் இருக்கும் சிலர் கூறினர்.
உலகம் தங்களைக் கைவிட்டதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
துருக்கி, சிரியா இரு நாடுகளையும் உலுக்கிய நிலநடுக்கத்தில் 35,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர். சிரியாவில் மட்டும் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.