ஐ.நா.அமைதிப் படையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் பணியாற்றி வந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய என்ற இலங்கை இராணுவ வீரர் மாலியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஐ.நா.அமைதிப் படையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் பணியாற்றி வந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய என்ற இலங்கை இராணுவ வீரர் மாலியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42.
இந்நிலையில் அவரது பூதவுடல் பிப்ரவரி 22 -ந்தேதி பிற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடல் பேழை இலங்கை இராணுவ சேவைப் படையணியினரால் இராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ஐ.நா.வின் கொடி போர்த்திய பேழையை மாலியை தளமாகக் கொண்ட 4 வது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் குழுவின் வழங்கல் மற்றும் போக்குவரத்து அதிகாரியான லெப்டினன் கேணல் எச்.எம்.டபிள்யூ.ஆர் ஹேரத் அவர்களால் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவ அணிவகுப்புக்கு பின்னர் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய பூதவுடலை முறைப்படி பெற்றுக் கொண்டதனை அடையளப்படுத்தும் வகையில் இலங்கை லெப்டினன் கேணல் எச்.எம்.டபிள்யூ.ஆர் ஹேரத் அவர்களிடம் ஐ.நா கொடி