மியன்மாரில் குண்டு வெடிப்பு: மூவர் மரணம்
யங்கூன்: மியன்மாரின் ரயில்வே நிலையம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது மூவர் மாண்டனர், ஒன்பது பேர் காயமுற்றனர். அந்நாட்டின் ராணுவ அரசாங்கமும் உள்ளூர் ஊடகங்களும் இத்தகவலைத் தெரிவித்தன.
பாகோ வட்டாரத்தில் உள்ள நியாவுங்லேபின் நகரின் ரயில்வே நிலையம் ஒன்றில் சம்பவம் நிகழ்ந்தது. அந்நகரம் யாங்கூன் நகருக்கு சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
குண்டு வெடிப்பு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 12.20 மணியளவில் நிகழ்ந்ததென மியன்மாரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்தது. குண்டு வெடிப்புக்கு ராணுவ ஆட்சிக்கு எதிராகச் செயல்படும் பிடிஎஃப் எனும் மக்கள் தற்காப்புப் படை காரணம் என்று அரசாங்கம் தனது அறிக்கையில் கூறியது.