மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

0 88

மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி மறைவு
*சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் *

மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி (வயது 88) அவர்கள் (26-3-23) ஞாயிற்றுக்கிழமை மாலை குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

ஆரம்ப காலத்தில் சுதேசமித்திரன் தினசரி பத்திரிகையில் 5 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக பணியாற்றிய திரு. ராமமூர்த்தி அவர்கள் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்று தொடர்ந்து 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயா டி.வி.யில் 5 ஆண்டு காலம் ‘தேன் கிண்ணம்’ என்ற நிகழ்ச்சியையும் நடத்தி சினிமா துறையிலும், பத்திரிகை துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர் ஆவார்.

*தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர் திரு. ராமமூர்த்தி அவர்கள் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் *

மேலும் விவரங்கள் தொடர்புக்கு..
திரு. கோபாலன் ( சகோதரர் )
98400 28716

பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
சென்னை
26-03-2023

Leave A Reply

Your email address will not be published.