கள்ள சாராயத்தால் 22 பேர் சாவு! “டாஸ்மாக்”ஆல் ஆயிரகணக்காணோர் மரணம்!

0 73

கள்ள சாராயத்தால் 22 பேர் சாவு! “டாஸ்மாக்”ஆல் ஆயிரகணக்காணோர் மரணம்!

அரசுக்கு வரி கிடைக்காததால் அதுக்கு பெயர் கள்ள சாராயம்!
டாஸ்மாக் நல்ல சாராயமா?

தனியார் சாராய ஆலைகளை அரசு மூட வேண்டும் அல்லது
தென்னை பனை மதுபான கடைகளை அரசே திறக்க வேண்டும்!

ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தல்!

கள்ள சாராயச் மரணங்கள்..! டாஸ்மாக் விற்பனையை நியாயப்படுத்தவும், நாட்டுமதுவால் டாஸ்மாக்கிற்கு ஏற்படும் இழப்பை கருதியும், நாட்டு மதுவை அங்கீகரிக்கும் காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் அரங்கேற்றப்பட்டதா?
என்பதே இப்பொழுது பலரது கேள்வி!

உற்பத்தி செலவைவிட 50 மடங்கு அதிக விலையில் ‘டாஸ்மாக் மது’ ! கொள்ளையடிக்கும் தனியார் சாராய முதலாளிகள் முக்கியமாக அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள்.

சாராய கடை கள்ளுக்கடை என்று
இருந்த காலங்களில் கூட இப்படிப்பட்ட மரணங்கள் இல்லை

‘கள்ளச்’ சாராயம் என்ற வார்த்தை பிரயோகத்திலேயே, ஒரு நுட்பமான அரசியல் நுழைந்து ஆட்சி செய்கிறது! உண்மையில் கள்ளு சாராயம் என்பது அது நாட்டு மது!
ஆங்கிலத்தில் சொல்ல அது வேண்டுமென்றால், ‘இண்டிஜினியஸ் லிக்யூர்’!
அதை கள்ளச் சாராயம் என்ற பதத்தில் அழைப்பதற்கான காரணம், ‘அதன் விற்பனையில் அரசுக்கு வரி கிடைப்பதில்லை’ என்பதால் தான்!

இந்த கள்ளச் சாராயத்தால் 22 பேர் மரணம் என்பது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் போது, டாஸ்மாக் மதுவால் மாதம் தோறும் ஆயிரக்கணக்கானோர் உடல் நலிவுற்று மரணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

பொள்ளாச்சி மகாலிங்கம் சென்னை வினோபா அரங்கில் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சு, ”சர்க்கரை ஆலையின் கரும்பு சக்கையில் கிடைக்கும் மொலாசஸ் என்ற கழிவில் இருந்து தான் மது தயாரிப்புக்கான ‘ஸ்பிரிட்’ பெறுகிறோம்.
ஒரு லிட்டர் சாராயத்தின் அடக்க விலை 12 தான்! ஆனால், ஒரு லிட்டர் பிராந்தி ரூ 380க்கு விற்கிறார்கள்” என்றார்.
தற்போது அது ரூ800 க்கு விற்கப்படுகிறது! இப்படி உற்பத்தி விலைக்கும், விற்கும் விலைக்கும் மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசம் இருப்பது பேராசையிலும், கொடூரமான பேராசையல்லவா?
இதனால் தான் ஏழை மது பிரியர்கள் பலர் அரசு பெயரிடும் கள்ள சாராயத்தை நோக்கி செல்கிறார்கள்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி அவர்கள் ‘பனங்கள், தென்னங்கள் இறக்கி கொள்வதற்கான 33 ஆண்டுகால தடையை விலக்கி கொள்ள வேண்டும்’ என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் அவர், ”பழவகைகளை பயன்படுத்தி பிராந்தி, விஸ்கி, ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களை தயாரிக்க வேண்டும். கரும்பின் கழிவு பொருளான மொலாசிஸ் கொண்டு மது தயாரிப்பது பலருடைய உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது” என்று பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசாகத்தான் இருக்க வேண்டும் தனிப்பட்ட சாராய ஆலை முதலாளிகளுக்கான அரசாக இருக்கக் கூடாது மக்களின் நலன் மக்கள் உயிர் சார்ந்த அரசாக தான் இருக்க வேண்டும்,

கள்ளச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிற அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அல்லது டாஸ்மாக் கடைகளை வைத்து அதிக லாபம் பார்த்து பிழைப்பு நடத்தும் சாராய ஆலைகளை மூட வேண்டும் அல்லது சாராய ஆலைகளையும் அரசே எடுத்து நடத்த வேண்டும்

அல்லது டாஸ்மாக் கடைகளை மூடவே முடியாது என்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் இது போன்ற சாவுகள் தடுக்கப்பட வேண்டுமானால் தென்னை பனை மதுபான விற்பனையை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று தமிழக ஆம் ஆக்கிய கட்சி சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.