பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசிய வட்டாச்சியர்
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் டி.ஆர்.கவியரசு அவர்களின் கண்டன அறிக்கை:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், மா.கொத்தங்குடி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளிய அடித்தட்டு பாமர மக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்காததை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சமத்துவக் குரல் நாளிதழின் மாவட்டச் செய்தியாளர் திரு.சூரிய மூர்த்தி அவர்களையும், தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட சமத்துவக் குரல் நாளிதழ் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு.சி. கருணாகரன் அவர்களையும் தரகுறைவாக பேசிய காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் ஆணவப் போக்கினை,
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.