மயான பாதை இன்றி தவிப்பு அதிகாரிகள் அலட்சியம் !

0 148

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மயான பாதை இன்றி தவிக்கும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வர கண்ட நல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு கெடிலம் நதிக்கரைக்கு செல்வது வழக்கம் ஆனால் தற்போது இவ்வழி ஆக்கிரமிக்க பட்டுள்ளது இதை மீட்க பல ஆண்டுகளாக போராடி ஓய்ந்து முடங்கி தவிக்கின்றனர் , முன்பு காலங்காலமாக வழக்கமாக கிராமத்தில் இருந்து ஈஸ்வர கண்ட நல்லூர் சித்தேரி வாய்க்கால் வழியாக 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெடிலம் ஆற்றிற்கு சடலத்தை எடுத்துச் செல்வார்கள் ஆனால் காலப்போக்கில் தற்பொழுது வாய்க்காலை திருத்தி நிலமாக ஆக்கிரமித்துக் கொண்டு வேலி அடைத்து தனிநபர் விவசாயம் செய்து வருகின்றனர் இதுகுறித்து பல ஆர்பாட்டங்கள் ,போராட்டங்கள், என தெருவில் இறங்கியும் நீதி கிடைக்கவில்லை பின்பு பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் துணை ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரிடமும் கோரிக்கை வைத்து பலரும் வந்து இடத்தை பார்வையிட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் ஆறு மாதத்தில் முடித்து தருவோம் என்றும் குறிப்பிட்ட காலத்தில் பெற்று தருவோம் எனக் கூறியும் வாக்குறுதிகள் அளித்தும் செல்வார்கள் ஆனால் இதுவரை இந்த பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை பாதையும் கிடைக்கவில்லை இறந்தவரின் சடலத்தை புதைப்பதற்கு இத்தகைய இன்னல்களை சுமந்து வசிக்கும் கிராம மக்கள் இனியாவது இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற பெருத்த நோக்கத்தோடும் ஆவலோடும் கிராம மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இம்மக்களுக்கு எப்பொழுது நீதி கிடைக்கும்என மயான பாதைக்காக காத்துக் கிடக்கும் ஈஸ்வரகண்டந ல்லூர் மக்களகளக

Leave A Reply

Your email address will not be published.