ரேனால்ட் நிஸ்ஸான், தமிழக அரசு ஒப்பந்தம்: இரண்டாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

0 173

சென்னை: இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசுக்கும் ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் அந்நிறுவனத்தின் தமிழக உற்பத்தித் திறன் இரண்டு லட்சம் கார்களில் இருந்து நான்கு லட்சமாக அதிகரிக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்காக அந்நிறுவனம் ரூ.5,300 கோடி முதலீடு செய்யும் என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை முதற்கட்டமாக 3,300 கோடி ரூபாய் முதலீடு, இரண்டாயிரம் வேலை வாய்ப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2007-08ஆம் ஆண்­டில் ஒர­க­டம் தொழிற் பூங்­கா­வில், 4,80,000 கார்­கள் உற்­பத்­தித் திறன் கொண்ட ஒரு முழு­மை­யான ஒருங்­கி­ணைந்த அதி­நவீன பய­ணி­கள் வாகன உற்­பத்தி ஆலையை அந்­நி­று­வ­னம் நிறுவியது.

ரேனால்ட் நிஸ்­ஸான் குழு­மம் ஏற்­கெ­னவே தனது உற்­பத்திப் பிரி­வின் மூலம் சுமார் 15 ஆயி­ர­ம் பேருக்கு வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தந்­துள்­ள­தா­க­வும் பொறி­யி­யல் மையங்­கள், உற்­பத்தி திட்­டங்­கள், விற்­பனை நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றில் செய்­துள்ள முத­லீ­டு­கள் வழி மேலும் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

வேலை வாய்ப்­பு­க­ளைப் பெற்ற­வர்­களில் பெரும்­பா­லா­னோர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் அரசு செய்­திக்­கு­றிப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

“ரேனால்ட் நிஸ்­ஸான் இந்தியா நிறு­வ­ன­மா­னது தமி­ழ­கத்­தில் 4.80 லட்­சம் கார்­களை உற்­பத்தி செய்­யும் திற­னைக் கொண்­டுள்­ளது. எனி­னும் தற்­போது இரு­நூ­றா­யி­ரம் கார்­கள் மட்­டுமே உற்­பத்­தி­யா­கின்­றன.

“இந்­நி­லை­யில், தற்­போ­தைய செயல்­பா­டு­களை விரி­வு­ப­டுத்து­வது, அதா­வது, உற்­பத்­தித் திறன் பயன்­பாட்டை 2 லட்­சம் கார்­களில் இ­ருந்து 4 லட்­சம் கார்­களாக விரி­வு­ப­டுத்த அந்­நிறு­வனம் திட்­ட­மிட்­டுள்­ளது,” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.