முதல்வர் ஸ்டாலின்: இந்தியாவுக்கு 2024ல் விடியல் பிறக்கும் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ புகைப்படக் கண்காட்சி

0 183

சென்னை: கடந்த 2021ல் தமிழ்­நாட்­டுக்கு விடி­யல் கிடை­த்த­து­போல், வரும் 2024ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வுக்கு விடி­யல் பிறக்­கும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நம்­பிக்­கை தெரி­வித்­துள்­ளார்.

சென்னை கொரட்­டூ­ரில் மறைந்த முன்­னாள் அமைச்­சர் பரிதி இளம்வழு­தி­யின் இல்­லத் திரு­மண விழா­வில் பேசிய அவர், ஐந்து முறை முதல்­வ­ராகப் பணி­யாற்­றிய கரு­ணா­நிதி, தமி­ழக மக்­க­ளுக்கு பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்றி சாதனை புரிந்­துள்­ள­தா­கக் கூறி­னார்.

அந்த நலத்­திட்­டங்­க­ளுக்கு கையெ­ழுத்­திட்­டது கலை­ஞ­ரின் பேனா­தான் என்று குறிப்­பிட்ட ஸ்டா­லின், “மத்­திய பாஜக அரசு தான் அளித்த வாக்­கு­று­தி­கள் எதை­யும் சொன்னது சொன்னபடி நிறை­வேற்­ற­வில்லை,” என அவர் குற்­றம்­சாட்­டி­னார்.

“2021ல் தமிழ்­நாட்­டுக்கு விடி­யல் கிடை­த்த­து­போல், வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இந்­தி­யா­வுக்கு ஒரு விடி­யல் பிறக்கும் சூழல் வரப்­போ­கிறது. அதற்கு நீங்­கள் அனைவரும் தயா­ராக இருங்­கள்,” என்று ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

“ஆண்­டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்­கு­வ­தாகக் கூறித்தான் பிர­த­மர் நரேந்திர மோடி ஆட்­சிக்கு வந்­துள்­ளார்.

“தமிழ்­நாட்­டுக்­கான ேசது சமுத்­தி­ரத் திட்­டம், எய்ம்ஸ் மருத்­து­வ­மனை உட்­பட எந்த திட்­டத்­தை­யும் மத்­திய அரசு நிறை­வேற்ற­வில்லை,” என குற்­றம்சாட்­டிய ஸ்டாலின், நாடா­ளுமன்றத்தில் திமுக எம்­பிக்­கள் எழுப்பும் கேள்­வி­க­ளுக்­கும் பிரதமர் பதி­ல­ளிப்­ப­தில்லை என­றும் தெரி­வித்­தார்.

சென்னை, லலித்கலா அகாடமியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற புகைப்படக் கண்காட்சி நடந்தது. வரும் 15ஆம் தேதிவரை நடைபெற உள்ள இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ரசித்துப் பார்த்தார். நடந்த சம்பவங்களை அப்படியே தத்ரூபமாக வெளிக்காட்டக் கூடியது படங்கள். ஒரு பத்திரிகையில் உள்ள செய்தியைப் படித்துப் புரிந்து கொள்வதைவிட, ஒரு புகைப்படத்தைப் பார்த்த உடனேயே செய்திகளைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பேனாவிற்கு எப்படி சக்தி இருக்கிறதோ, அதேமாதிரி புகைப்படத்திற்கும் சக்தியும் உயிரோட்டமும் உள்ளது என ஸ்டாலின் கூறினார். படம்: தமிழக ஊடகம்

Leave A Reply

Your email address will not be published.