கிரிக்கெட்: மூன்றாவது டெஸ்ட் இடமாற்றம்
இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
தர்மசாலா ஆடுகளத்தின் தரம் குறித்து கேள்விகள் எழுந்ததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கம் அண்மையில்தான் தரம்சாலா ஆடுகளத்தை மாற்றியமைத்திருந்தது.
பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் ஆடுகளத்தில் போதிய அளவில் புற்கள் வளரவில்லை என்பதால் ஆட்டம் இடமாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது ஆட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடக்கவுள்ளது.
நான்கு டெஸ்ட் ஆட்டம் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியா 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது ஆட்டம் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி நடக்கிறது.