திருவாடான தாலுகா தெற்கு குடியிருப்பு அருகே மூதாட்டி அடித்து கொலை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

0 135

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தளிர்மருங்கூர் அருகே பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி ( 75 ) வசித்து வருகிறார். கணவர் இறந்து 2 வருடத்திற்கு மேல் ஆகிறது.
இவருக்கு 2 மகன் 2 மகள் அவரவர் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
ஜெயசீலி மட்டும் 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து மேய்த்தும் விவசாயம் செய்து வரும் நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
இன்று காலை வீட்டின் வெளியில் கட்டிலில் படுத்திருந்த நிலையில் தலையில் ரத்தகாயத்துடன் கொலை செய்யபட்டுகிடந்ததுள்ளார். என அவரது இளைய குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் தொண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு கூடுதல் கண்காணிப்பாளர் அருண், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு, ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தடையவியல் சார்பு ஆய்வாளர் சேதுராஜ், உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர் இது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு டிஐஜி துரை உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
ஏதேனும் முன் விரோதம் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்…. தொண்டி வாசு ஜெயந்தன்

Leave A Reply

Your email address will not be published.