ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் புதிய பஸ் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டது மாவட்ட திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளரும் இராமநாதபுர தொகுதி எம்.எல்.ஏவுமான காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் மற்றும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.கரு.மாணிக்கம் தலைமையில் யூனியன் சேர்மன் முகமது முக்தார் முன்னிலையில் திறக்கப்பட்டது. மேலும் தொண்டி நகர் தி.மு.க சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாட்டுப்படகுகளுக்கான படகுப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலி கான், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், செங்கமடை ரவி,பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். சிறப்புசெய்தியாளர்..*வாசுஜெயந்தன் தொண்டி