ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் வேதனை

0 537

தொண்டி, ஜூன்.24-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமையில் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி,மஹ்ஜபின் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார்.எஸ்.எம்.சி.பாடல் சார்ந்த மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி திறந்து முதல் கூட்டம் காரணமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்,கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதை பார்க்கிறோம். எண்ணும், எழுத்தும் கல்வி போன்ற திட்டங்கள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த பற்றாக்குறையை எப்போது நிவர்த்தி செய்வீர்கள் என்று கேட்டதற்கு, பள்ளி தலைமை ஆசிரியை கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் அவர்கள் பற்றாக்குறையை சரி செய்வார்கள் என்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதிலைத்தான் கூறி வருகிறீர்கள். உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்போம் என்று பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்கூறினர். ஆசியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்பு, பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கூடுதல் வகுப்பறை பள்ளிக் கட்டிடம் கட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியைகள் புஷ்பா, இஸ்மத் ராணி உட்படஇல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயந்தன். உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.