தொண்டி அரசுமேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 715

வக்கில் கலந்தர்ஆசிக் தொடுத்த பொதுநலமனு

தொண்டி,ஜூலை.4-

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி,தமிழக அரசின் சுகாதாரத்துறை

வழங்கிய அனைத்து ஆவணங்களுடன்

மனித நேய மக்கள் கட்சியின்

மாநில வழக்கறிஞர் அணி

துணைச் செயலாளர்

கலந்தர் ஆசிக் அகமது

மதுரை உயர்நீதிமன்றத்தில்

தாக்கல் செய்த பொதுநல வழக்கானது

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு

நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு டிவிஷன் பெஞ்சில் விசாரணை நடைபெற்றது.

தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என

மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வருகின்ற

6-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவமனையாக வரும் 6-ம் தேதிக்குப் பிறகு தரம் உயர்த்தப்படும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அரசு மருத்துவமனையை நம்பியுள்ள தொண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் சுகாதாரத் தேவையை அரசுநிறைவேற்றுமா? காத்திருக்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள்.

சிறப்புசெய்தியாளர் ஜெயந்தா- மணிகண்டன்

Leave A Reply

Your email address will not be published.